Tuesday, 29 March 2016

" மது அருந்தாதவனைக் கூட கண்டுபிடித்துவிடலாம், ஆன்ராய்டு கைபேசி, அல்லது ஜாவா கைபேசியாவது இல்லாத ஆட்களைக் கண்டுப்பிடிக்கவே முடியாது " " நான் ஜாவா கைபேசி தான் பயன்படுகிறேன், நான் கைபேசி பயன்படுத்தத் தொடங்கிய ஆரம்பக் காலத்திலிருந்து ஏர்செல் நெட்வொர்க்கைத் தான் பயன்படுத்தி வருகிறேன், மூன்று மாதங்களுக்கு முன் 37 ரூபாய்க்கு நெட் கார்டு போட்டால் ஒரு மாதம் வரை போதுமானதாக இருந்தது, இரண்டு வாரத்திற்கு முன் 37 ரூபாய்க்கு நெட் கார்டு ஆக்டிவேட் செய்தேன், அதன் வாலிட்டி ப்ரீயர்டு மூன்று நாளைக்கு வந்துவிட்டது, முப்பது நாட்களில் இருந்து இரண்டு மாதத்திற்கு மூன்று நாளைக்கு வந்துவிட்டது, இன்று ஒரு மாதத்திற்கான வாலிட்டி ப்ரீயர்டுடன் 800 எம்பிகளுக்கு, 148 ரூபாயை கொடுத்து ஆக்டிவேட் செய்துள்ளேன், பெட்ரோல், டீசல் விலை உயர்வை விட ராக்கேட் வேகத்தில் உயர்ந்து வருகிறது நெட் கார்டுகளின் விலை, போகின்ற போக்கைப் பார்த்தால், இனி நானும், என்னைப் போன்ற குடும்பச்சூழ்நிலையில் வாழும் என் உடன்பிறவாச் சகோதர, சகோதரிகளும் இணைதளம் பயன்படுத்துவோமா? என்பது கேள்விக்குறி தான், இது புலம்பல் அல்ல, உண்மை நிலை, தொழிற்நுட்ப வளர்ச்சி என்பது பணம் சம்பாதிப்பதிலே இல்லை, தொழிற்நுட்ப வளர்ச்சி என்பது அடித்தள மக்களும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதே பதிவின் நோக்கம், இது BSNL நெட்வொர்க்கைத் தவிர்த்து, மற்ற நெட்வொர்க்களுக்குப் பொருத்தும்.

No comments:

Post a Comment