Saturday 23 January 2016

தன்னம்பிக்கை வரிகள்

சித்திரம் வரைய சுவரில்லை எனில், காற்றைத் திரையாக்குவேன், கற்பனையை எழுதுகோல் ஆக்குவேன், எண்ணங்களை நினைப்பாக்கி, என் மண்டைவோட்டை அலைபரப்பும் கருவியாக்கி, நான் வரைய நினைத்ததைச் சமூகத்தில் நிகழ்த்திக் காட்டுவேன், அருமையான, உண்மையாக காட்சியாக... ¤சிவன்¤

கூலித் தொழிலாளியின் மகன் (பக்க எண்:- 17)

சிவா நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான், சிவாவின் சந்தோஷத்தைப் பார்த்து போறாமைக் கொண்ட கடவுள் என்பவன் பல சிக்கல்களை ஏற்படுத்தி குடும்பத்தைப் பிரித்தான், திரவியம் மற்றும் அவருடைய மனைவிக்குமிடையே சண்டை மிக அதிகமாகியதால் ஒருவரை ஒருவர் பிரிந்தனர், சிவாவின் மாமாவும் தன் மனைவி, மகளுடன் வெளியூர் சென்றுவிட்டார், இப்போது சிவா அனாதையைப் போல் உணர்ந்தான், அதனால், திரவியம் சிவாவை தன் தந்தை வேலுவிடமும், தன் தாய் திருவாய் அம்மாளிடமும் ஒப்படைத்தார். அங்கு தாத்தாவிடம் தினமும் கதைகள் கேட்டு வளர ஆரம்பித்தான், பள்ளிக்கூடத்தில் தீவிரமாக படிக்க ஆரம்பித்தான், அவன் தாத்தா வேலுவும் அவனுக்கு பல நல்ல விஷயங்களை கதைகளின் மூலமாக தெரிய வைத்தார், புரிய வைத்தார், தன் மகன் திரவியத்தைப் போல சிவாவுக்கு பல வீர விளையாட்டுக்களை சிறுவயதிலேயே கற்றுத் தந்தார், சிவாவும் தேர்ச்சி அடைந்தவனாக ஆனான், அவன் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் போது, வெளியூரில் இருந்த அவன் மாமன் மகள் எதிர்ப்பாராத விதமாக இறந்துவிட்டாள், இது சிவாவுக்கு தெரியும் போது கடவுளின் மீது கோபம் வந்தது, அன்று சிவா கடவுளை மனதில் எண்ணி இவ்வாறு சபதம் எடுத்தான், " முதல் என் அக்காவை என்னிடமிருந்து, கவர்ந்து கொண்டாய், என் தாயின் அன்பு எனக்கு கிடைக்காமல் செய்தாய், இப்போது, என் மீது அன்பாக இருந்த ஒரு ஜீவனையும் கவர்ந்துக் கொண்டாய், இனி உன்னை கொவிலில் வந்து வணங்கமாட்டேன், கள்வனே! நீ எங்கிருந்தாலும் உன்னைக் கண்டுபிடிந்து வந்து என் அக்காவையும், என் தோழியையும் மீட்பேன் " எனச் சொல்லி வீட்டில் இருந்த சாமி படங்களைத் தூக்கி வெளியே எறிந்து உடைத்தான், திரவியமும், வேலுவும் அவன் கோபம் கண்டு எதுவும் பேசமுடியாமல் அமைதியாக நின்றனர், இன்னும் நாட்கள் பல நகர அவன் கடவுள் மீது கோபமும் பல மடங்கு பெருகியது, சிவாவின் பாட்டி ஒரு சாமியாடி, கோவில் அம்மன் சாமி வரும், ஒருநாள் தன் இரவில் தீடிரென சிவாவின் பாட்டிக்கு சாமி வந்து ஆடினார், வேலு பேசாமல் படுத்து இருந்தார், சிவாவுக்கு தொந்தரவாக இருந்தது, சிவாவின் பாட்டி குலவைச் சத்தம் இடுவதும், ஆதாளி போடுவதுமாக இருந்தார், சிவா வேகமாக எழுந்தான், தன் பாட்டியை நோக்கி வணங்கிவிட்டு, " என் அக்காவைத் திருப்பிக் கொடு ", என்றான், அதற்குப் பதில் அவன் பாட்டியிடம் இருந்து வெளிப்பட்டது, " மாண்டார் திரும்புவதில்லை, அதை மாற்ற யாராலும் முடியாது, பிறந்தால் இறப்பு என்று ஒன்று உண்டு " உடனே சிவா கோபத்தோடு, " உன்னால் மாற்ற முடியாது எனில் கடவுள் என்று சொல்லித்திரியாதே, உன்னால் என் அக்காவைத் திருப்பித் தர முடியாதெனில் நீ கடவுள் ஆக இருக்க மாட்டாய், இனி எங்காவது வந்து குலவைச் சத்தமோ ஆதாளியோ போட்ட அவ்வளவு தான், முதலில் நீ இங்கிருந்து ஓடிப் போ " எனத் தரையில் ஓங்கி அடித்தான், அவன் பாட்டி அமைதியாகிவிட்டார், அதன் பிறகு அவர் சிவா முன்னிலையில் சாமியாட மாட்டார். (இக்கதையின் தொடர்ச்சியை www.facebook.com/sivananainthaperumal.udhaya2 என்ற முகவரியில் படிக்கவும்)

என் வாசகம்: Peace : விவேகானந்தர் கவிதை

என் வாசகம்: Peace : விவேகானந்தர் கவிதை

நின்மலன்: ஜென் கதைகள் : பெரிய அதிசயம்

நின்மலன்: ஜென் கதைகள் : பெரிய அதிசயம்