Friday, 16 October 2015

பூமித் தாய்

எங்கே நிம்மதி? எங்கே சுயநலமில்லா அன்பு? பத்து மாதங்கள் சுமந்தது போதும் என்று அவள் சுமையை இறக்கி விட்டாள் நண்பா, இறங்கியது முதல் இன்று வரை நான் பூமி தாயின் மடியில் தான் தவழ்கிறேனடா, என்னை பெற்றெடுத்த தாய் கூட நான் அடித்தால் தாங்குவாளோ என்னவோ, ஆனால், இந்த பூமித் தாயை நான் எவ்வளவுத் மிதித்தாலும் தாங்கிக் கொள்கிறாள் நண்பா, நான் கால் இடறி தரையில் விழுந்தால், என் மகனே பார்த்து நட டா கண்ணா என்று என் நெற்றியில் முத்தம் தருகிறாளடா நண்பா, இந்த பாசம் யாரிடம் கிடைக்கும்? இந்த அன்பு யாரிடம் கிடைக்கும்? பூமித் தாயின் மடியில் படுக்கும் போது கிடைக்கும் அந்த நிம்மதி பஞ்சு மேத்தையில் கிடைக்குமா? இல்லை, வேறு பெண்ணிடம் கிடைக்குமா? இல்லை, பூமித் தாய்க்கு நிகரான அன்பு காட்டும் ஜீவன் இங்கு எதுவுமில்லை நண்பா, அந்த அன்பை நான் முழுமையாகப் பெற என் மரணத்திற்குப் பிறகு என்னை எரிக்க வேண்டாம் நண்பா, என் பூமித் தாயிடம் புதைக்க வேண்டும். இதுவே என் கடைசி ஆசை.

No comments:

Post a Comment