Sunday 5 June 2016

புதியதொரு பகவத் கீதை


இல்லறமும் துறவறமும்........
(அத்தியாயம்:- 2) (பக்க எண்:- 3)

மனிதர்கள் மீது மரங்களின் படையெடுப்பிற்கு நான் என் மனைவிஇ உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சந்தோசமாகஇ உற்சாகமாகஇ ஆனந்தமாக வாழ்ந்து வந்தேன்.

நான் வாழ்ந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் மிக உற்சாகமாகவும்இ ஆனந்தமாகவும் வாழ்ந்தார்கள்.
ஏனெனில்இ அவர்கள் நம்பிக்கையோடு ஒருவருக்கொருவர் ' தூய்மையான அன்பு " கொண்டு உதவி செய்து வாழ்ந்தனர்.
அங்கு ' கெட்டவர் " என்று குறிப்பிட யாரும் இல்லை.
அங்கு யாருடைய உரிமையும் பறிக்கப்படவோஇ மறுக்கப்படவோ இல்லை.
அனைவரும் ' ஒருவனுக்கு ஒருத்தி " என்ற கொள்கையோடு வாழ்ந்தார்கள்.
அங்கு சாதிஇ மதம்இ நிறம்இ இனம்இ மொழிஇ நாடு
போன்ற வேறுபாடு எதுவும் காணப்படவில்லை.
என் மக்கள் அனைவரும் என்னை அவர்களின் தலைவனாகக் கருதினார்கள். நான் அவர்களின் சேவகனாகவே நடந்து கொண்டேன். நல்வழிகளை அவர்களுக்குப் போதித்தேன்.

' நேர்மறை " என்று ஒன்று இருந்தால்இ அதை அழிக்க ' எதிர்மறை " என்று ஒன்று புறப்படும் அல்லவா?
எங்களின் ஆனந்த வாழ்வைக் கண்டு பொறாமை கொண்டுஇ அதை அடியோடு அழிக்க பல தீய சக்திகள் ஒன்றிணைந்து திட்டம் திட்டினர்..
அவர்களின் திட்டம் என்னவென்றால்இ ' மக்களிடையே பேராசையை விதைத்துஇ அதைக் கொண்டு கோபம்இ குரோதம் ஆகியவற்றை உற்பத்தி செய்துஇ மனிதர்களுக்கிடையே போட்டிஇ பொறாமை ஆகியவற்றை வளர்த்துஇ மனிதர்கள் ஒருவருக்கொருவர் பகை கொண்டு தங்களுக்குள்ளே சண்டையிட்டு ஒருவரை ஒருவர் அழித்துச் செய்வது. " என்பதாகும்.

அத்திட்டத்தின் ஆரம்பமாக பேராசையே உருவாக ஒரு உயிர், நாங்கள் வாழ்ந்த பகுதிக்குள் தஞ்சமடைந்தது. என் மக்களும், நானும் எங்களின் தூய்மையான அன்பால் அந்த உயிரை அரவணைத்தோம்...
முதலில் எங்களுடன் அன்பாகப் பழகிய அந்த உயிர், போக போக அதன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது.
அந்த உயிர் ஒரு பெண் என்பதாலும், என் மக்கள் அனைவரும் நல்லவர்கள் என்பதாலும் யார் மீதும் நான் சந்தேகம் கொள்ளவில்லை....
ஆனால், அந்த உயிரோ என் மனைவியின் நெஞ்சிலேயே நஞ்சைக் கலந்தது. அது எவ்வாறு கலந்ததென்றால், ' எனக்கும், என் மனைவிக்கும் இடையேயான இல்லறத்தின் அடையாளமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. அதனால், நானும், என் மனைவியும் எங்களிடம் சொத்து, பணம் அதிகமாக இருப்பதால், ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்து, அவர்களை எங்களுடைய குழந்தைகளுடன் சேர்த்து வளர்த்து வந்தோம். எனக்கும், என்னுடைய மனைவிக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய மிகவும் பிடிக்கும். அந்த அளவிற்கு அன்போடு, கருணையோடு இருந்த என்னுடைய மனைவியின் நெஞ்சில் பேராசை மற்றும் சுயநலம் ஆகிய இரண்டையும் விதைத்தது. அதுவரை எந்த ஏழைக் குழந்தைகளைத் தன் குழந்தைகளைப் போல அன்பு காட்டி வளர்த்து வந்தாளோ, அந்தக் குழந்தைகளையே அடியோடு வெறுக்க ஆரம்பித்தாள். அவளுடைய நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களை என்னால் நன்கு உணர முடிந்தது. எப்போதும் எனக்கும், குழந்தைகள் அனைவருக்கும் உணவு பரிமாறி, தானும் உணவு உண்ணும் என் மனைவி, இப்போதெல்லாம் சீக்கிரமே உணவு உண்டுவிட்டோ அல்லது உணவு உண்ணாமலோ சென்று படுத்துக் கொள்ளுவாள். நானோ, குழந்தைகளோ சென்று அழைத்தாலும் உடம்பு சரியில்லை என்று வர மறுத்துவிடுவாள். இந்நிலை ஒரு மாதமாகத் தினமும் தொடர்ந்து நடந்தது. "
அதற்கு மேலும் அந்நிலை நீடிக்க நான் விரும்பவில்லை. என் மனைவியிடம் சென்று பேச விழைந்தேன். அவள் என் முகம் காணக் கூட விரும்பாமல் விலகிச் சென்றாள். நான் அவளிடம், ' என்னவாயிற்று? ஏன் இப்போதெல்லாம் என்னை விலகி விலகிச் செல்கிறாய்? ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்துள்ளாய் என்று மட்டும் என்னால் உணர முடிகிறது. அந்தக் குழப்பம் என்னவென்று என்னிடம் சொல். அந்தக் குழப்பம் எதுவானாலும் தீர்த்து வைப்பேன் என உனக்கு வாக்களிக்கிறேன் அன்பே!. ", என்று கூறினேன்.
அதற்கு அவள், ' உங்களால் குழப்பத்தைத் தீர்க்க முடியாது. இருப்பினும் என் குழப்பத்தைக் கூறுகிறேன். கேளுங்கள் என்னவனே! என் குழப்பம் நாம் குழந்தைகள் இருவருடைய எதிர்காலத்தை எண்ணியே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளேன். நம் குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும், நம் சொத்து, பணம் எல்லாம் நம் குழந்தைகளுக்குத் தருவீர்களா? அல்லது அந்த ஏழைக் குழந்தைகளுக்கே தந்துவிடுவீர்களா? ", என்று கேட்டாள்.
அதைச் சற்றும் எதிர்பார்க்காத நான் அவளிடம், ' உன் மனதில் இப்படியொரு பிரிவினைவாத எண்ணம் தோன்றியது ஏனோ? என்னைப் பொருத்தவரை நம் குழந்தைகளும், அந்த ஏழைக் குழந்தைகளும் ஒன்று தான். அவர்கள் அனைவருக்கும் சம உரிமை உண்டு. ", என்றேன்.
அதைக் கேட்ட அவள், ' காக்கைக்கும் தன் குஞ்சே பொன் குஞ்சாகும். அந்த உரிமை கூட எமக்கில்லையா? எப்போது பார்த்தாலும் அடுத்தவர்களுக்கு நல்லது செய்வதைச் சிந்திக்காமல் கொஞ்சம் நம் பிள்ளைகளைப் பற்றியும் சிந்தியுங்கள். " என்றாள்.

அவளுடைய உள்ளத்தில் சுயநலம் தாண்டவமாடுவதை என்னால் நன்கு உணர முடிந்தது........

(தொடரும்.............)

No comments:

Post a Comment