Saturday, 24 October 2015

ஓ நண்பா, ஓ நண்பா, அருமையான அந்தி மாலைப் பொழுதில் மொட்டை மாடியில் படுத்திருந்த போது பரந்த வானில் ஒரு அதிசயம் கண்டேனடா, பல விதமான பறவைகள் வானில் பறந்த போது என்னைக் கவர்ந்தது ஒரு சிறு பறவை, அந்த சிறு பறவை தன்னால் எவ்வளவு உயரம் பறக்க முடியும் என்பதைக் காட்டியது நண்பா, அப்போது, எனக்குள் ஒரு கேள்வி தோன்றியது, சிறிது நேரம் நம் இரு கைகளை அசைத்தாலே வலிக்கிறது, ஆனால், இந்த சிறு பறவையோ பறந்து கொண்டே இருக்கிறதே, அதன் சிறகுகள் வலிக்காதோ? என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் நண்பா, அப்போது, எனக்குள் ஒரு குரல் கேட்டது, நான் பதறிப்போய், அது யாரெனப் பார்த்தால், அது என் மனச்சாட்சியின் குரல் தான் நண்பா, என்னைப் பார்த்து ஒரு ஏரளனச் சிரிப்புடன் சொன்னது, " சோம்பேறிகளுக்குத் தான் எந்த வேலையைச் செய்தாலும் உடம்பு வலிக்கும், சுறுசுறுப்பானவர்களுக்கு உடம்பு வலிக்காதே, ஏனெனில், அவர்கள் உடல் எப்போதும் இயக்க நிலையில் இருக்கும், மனிதர்கள் எப்போதும் சொம்பேறிகளாக தான் இருக்கிறார்கள், அதன் அவர்களால் எந்த சேயலையும் செய்ய முடியவில்லை ", அதைக் கேட்டதும் எனக்குள் ஞானம் பிறந்தது, பறவைக்கு நன்றி சொன்னேன் நண்பா,

No comments:

Post a Comment